வணக்கம் நண்பர்களே!
வலைத்தளத்தில் இது எனது முதல் பதிவு.
என்னைப் பொறுத்த வரை மாதா, பிதா, குரு, தெய்வம் பிறகு நண்பன்.
நம் அனைவருக்கும் நிச்சயமாக ஒரு நண்பனாவது உண்டு. நாம் அனைவரும் அவர்கள் மூலமாக இந்த உலகில் நிறைய கற்றுக்கொள்கிறோம். அதில் நல்லவையும் உண்டு தீயவையும் உண்டு. எதனை follow பண்ணவேண்டும் என்பது நம்மைப் பொறுத்தது.
என்னடா இவன் முதல் பதிவிலேயே கொல்லுறானே அப்படின்னு நினனக்கவேண்டாம். எதனால் என்னோட முதல் பதிவுல நண்பனைப் பத்தி சொல்லறன்னா, இப்படி ஒரு வலைதளம் நானும் ஆரம்பிக்க Inspirationனே எனது நண்பன்தான். ஒரு ரெண்டு வருஷத்துல எனக்கு அறிமுகமாகி என்னோட ஒண்ணா ஓரே இடத்துல வேலை பாத்து (இப்பவும் என்னோட வேலை பார்க்கும்) எனக்கு பல நல்ல விஷயங்கள புரிய வச்ச, கத்து கொடுத்த என் ஆருயிர் நண்பனுக்கு மனமார்ந்த நன்றி. நன்றி மறப்பது நன்றன்று அப்படிங்கற கொள்கையுடையவன் நான்.
இந்த தளத்துல இனிமேல் எனக்கு பிடித்த, ஏன் நம்மில் பலருக்கும் பிடித்த பல நல்ல கருத்துக்களை பகிர்ந்துக்கலாம் என்று ஆசைப்படுகிறேன்.
என் எழுத்தில் பிழை இருந்தால் கற்றுக்கொடுங்கள். என்ன இருந்தாலும் இப்பொழுது பிறந்த குழந்தைதானே, அதற்கும் கற்றுக்கொள்ள ஆயிரமுண்டு. எனவே அந்த குழந்தையை பக்குவமாக கைபிடித்து வழி நடத்தி செல்ல வேண்டுகிறேன்.
எனது ஆசையெல்லாம் கவிதையாகவும், கட்டுரையாகவும், கருத்துக்களாகவும் வெளிபடுத்தலாம் என்பது எண்ணம். ஆசையை மட்டுமல்ல ஆதங்கத்தையும்.
-புதிய நண்பர்களை நாடும் புது நண்பன்.
