
இதயத்தின் குரல்
ஜூலை 14, 2008என்னிடம்
“உனக்கு நான் யார்?”
என்று கேட்டாயே…
கேள் இனியவளே……..
என்…
இதயத்தின் துடிப்பாக நீ
காதலின் உருவாக நீ
பாசத்தின் பதிவாக நீ
கனவுகளின் ஊற்றாக நீ
உணர்வுகளின் உயிராக நீ
ஊக்கத்தின் உரமாக நீ
சாதனையின் கருவாக நீ
வெற்றியின் கனியாக நீ
முடிவினில் நீயே நானாக….
…உன் நினைவாய் உன் இதயத்தின் குரல்.